தமிழ்நாடு மின் வாரியத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு

சென்னை: நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் இன்று இரவு 9.00 மணி முதல் 9.09 வரை வீட்டு மின் விளக்குகளை மட்டும் அணைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இந்நிகழ்வில் மின் தேவையில் ஏற்படும் மாற்றத்தை கையாளும் வகையில் நமது மின் கட்டமைப்பு வலுவானதாகவும், நிலையானதாகவும் உள்ளது. இத்தருணத்தில் மற்ற அனைத்து மின் உபகரணங்களும் வழக்கம்போல் இயக்கத்தில் இருக்கலாம்.


ஆதலால் மெயின் சுவிட்சை அணைக்க வேண்டாம். மேலும் இத்தருணத்தில் தெரு விளக்குகள் மற்றும் மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், பொது நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய இடங்களில் உள்ள மின் விளக்குகள் வழக்கம்போல் இயக்கத்தில் இருக்கும்.