கொரோனா தொற்று பரவலில் அமெரிக்கா முதலிடம்: அரசின் மெத்தனமே காரணம்

வாஷிங்டன்: கொரோனா வைரசால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில், சீனாவை பின்னுக்குத்தள்ளி, முதலிடத்திற்குச் சென்றுள்ளது அமெரிக்கா.


கொரோனா வைரஸ் தொற்று உலகளவில், 5,31,860 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது; 24,057 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் - 81,782 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த தொற்றால் பேரழிவை சந்தித்து வரும் இத்தாலியில் - 80,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த இரு நாடுகளையும் பின்னுக்குத் தள்ளியுள்ள, அமெரிக்காவில் இதுவரை 85,653 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த வைரசால் ஏற்பட்ட உயிரிழப்புகளை பொறுத்தவரை, இத்தாலி - 8,215, ஸ்பெயின் - 4,365, சீனா - 3,169, அமெரிக்கா 1,200 உயிர் இழப்புகளை சந்தித்துள்ளன